1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (07:56 IST)

விஜயகாந்த் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க செல்லவுள்ள அஜித்… முன்னணுமதி கேட்டுள்ளதாக தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரின் உடல் அவரது கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் தினசரி அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித் அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை.

இந்நிலயில் விரைவில் சென்னை வரவுள்ள அவர் விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடம் துக்கம் விசாரிக்க நேரம் கேட்டு முன்னணுமதி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.