1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:20 IST)

லண்டன் சென்று அஜித்தை சந்திக்கும் இயக்குனர் மகிழ் திருமேணி!

அஜித் 62 படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதில் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் லண்டனில் இருக்கும் அஜித்தை சந்திக்க மகிழ் திருமேணி, லைகா குழுவோடு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு அஜித் மற்றும் லைகா குழுவை சந்தித்து கதையை சொல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.