1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (10:17 IST)

“AK 61” ரிலீஸ் எப்போது… போனி கபூர் வெளியிட்ட தகவலால் குஷியான அஜித் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் போனி கபூர் “தீபாவளிக்கு AK 61 ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.