1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:35 IST)

''அஜித்- 61'' படத்தில் அஜிட் கெட்டப் இதுதான் சுரேஷ் சந்திரா டுவீட் ! புகைப்படம் வைரல்

அஜித்61 பட புதிய கெட்டப் குறித்து  அவர்து மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் - ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் திரைக்கதை பணிகள் மற்றும் செட் அமைக்கும் பணிகள் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்ட பிறமொழி சூப்பர் ஸ்டார் நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது,  அஜித் சந்திரா தனது டுவிட்டர் பக்கதிதில், அஜித்61 படத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய கெட்டப் குறித்த புகைப்படத்தை கருப்பு வெள்லையில் பதிவிட்டுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.