வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 5 அக்டோபர் 2022 (20:59 IST)

ரஜினியின் புதிய புகைப்படத்துடன் ஐஸ்வர்யா டுவீட்...வைரல்!

rajinikanath
சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் டுவிட்டரில் ரஜினியைப் பற்றிய சில கருத்துகள் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில், தன் 169 வது படமான ஜெயிலர் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில்,  அவருடன் இணைந்து, ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், பிரமண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கேஸுவலாக உட்கார்ந்திருக்கும்போது, எடுத்த ஒரு புகைப்படத்தை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதில், இந்த முகம் ஒருபோது தவறான கோணத்தில் இருக்காது. இது விலைமதிப்பதிப்பற்ற நேர்மறையான  புகைப்படம் என்று தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை  மாற்றிக் கொண்டதாக தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj