1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:46 IST)

25 முறை ரீடேக் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

சில காட்சிகளில் 25 முறை கூட ரீடேக் வாங்கி நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


 

 
‘தேசிய விருது’ பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்ததன் மூலம் பரவலாகக் கவனம்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ், ‘டாடி’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். அர்ஜுன் ராம்பால் கேங்ஸ்டராக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருடைய மனைவியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

கதைப்படி அந்த கேரக்டர் ஹிந்தி மற்றும் மராட்டி மட்டுமே பேசவேண்டும். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மொழிகளிலுமே தெரியாது. எனவே, முதல் நாளே டயலாக் பேப்பரை வாங்கி, பேசிப்பேசி பழகி நடித்திருக்கிறார். அப்படியும் சில சமயங்களில் தடுமாற்றம் இருந்திருக்கிறது. மொழிப் பிரச்னையால் சில காட்சிகளில் 25 முறை கூட டேக் வாங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.