ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (12:38 IST)

ஒவ்வொரு வருடமும் ரூ.10 லட்சம் நிதியுதவி.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு..!

இயக்குனர் சங்கத்திற்கு ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது இயக்குனர்கள், உதவி இயக்குனர்களை வாரிசுகளுக்கு நிதி உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார் .

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கூறிய அவர் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட நிதியாக 5 லட்சத்தை இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்வி உதயகுமார் இடம் வழங்கி உள்ளார்.

அடுத்த கட்டமாக 5 லட்சம் ரூபாய் இன்னும் சில மாதங்களில் அவர் வழங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது இயக்குனர்கள் பேரரசு, சரண், ஆர் கே செல்வமணி, மித்ரன் ஜவகர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran