1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (15:34 IST)

தில்லால கில்லாடி ஐஸ்வர்யா ராஜேஷ் - ஐஸ்க்ரீம்காரரே அசந்து போயிட்டாரு!

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
 
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராமில் கோன்  ஐஸ்க்ரீம் prank வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்பேற்பட்ட ஜாம்பவான்களும் ஏமாந்துபோகும் அந்த கேமில் ஐஸ்வர்யா எடுத்த எடுப்பிலேயே கடைக்காரரின் கையில் இருந்து கோனை பிடிங்கிக்கொண்டார். உடனே ஷாக்கான கடைக்காரர் மீண்டும் வா என அழைத்து prank செய்துள்ள இந்த வீடியோ அனைவரின்  கவனத்தையும் ஈர்த்து வருகிறது.