1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (16:05 IST)

நான் சினிமாவுக்கு வரும்போது என்னிடம் இப்படி சொன்னார்கள்… புத்தக வெளியீட்டில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படங்கள் பர்ஹானா மற்றும் தீராக் காதல் ஆகியவையாகும்.

இந்நிலையில் பிவிஆர் தென்மண்டல மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா எழுதியுள்ள UNSTOPPABLE என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் “என் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். எங்கள் அம்மா பல வேலைகளை செய்து எங்களைக் காப்பாற்றினார். நான் சினிமாவுக்கு வரும் போது பலரும் என்னிடம் “நீ ஏன் சினிமாவுக்கு வருகிறாய். இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றனர்’ . ஆனால் இதையெல்லாம் தாண்டி வந்ததற்கு நாங்கள் Unstoppable ஆக இருந்ததுதான் காரணம். அதிகம் புத்தகம் படிக்கும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் நான் இந்த புத்தகத்தைப் படிக்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.