வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:34 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?

ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் பற்றிய புகார் ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்போது அவர் முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் சில படங்கள் உருவாக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா இல்லை சஸ்பெண்ட் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. தயவு செய்து உதவவும்’ எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து இப்போது இன்ஸ்டாகிராம் நடவடிக்கை எடுத்து அவரின் அக்கவுண்ட்டை திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.