வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 27 மே 2019 (14:39 IST)

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா!

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கி பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 
 
இவர் தற்போது மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மஹத்தை கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கியது. சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் M in அதாவது தான் காதலில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கண்ட  ரசிகர்கள் அந்த நபர் யார் என்று கேட்டு வந்தனர். 
 
கோபி என்பவரை காதலித்து வந்த ஐஸ்வர்யா அவரது பெயரை தனது கைவிரலில் பச்சை குத்திஇருந்தது பரவலாக பேசப்பட்டது. அந்த நபர் பலகோடி பண மோசடி வழக்கில் கைதாகி சிறைசென்றவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 


 
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆண் நண்பர் ஒருவருடன் தனிமையில் இரவு பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில் அப்லோட் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஓஹ் ஹோ..! அந்த  நபர் இவர் தானோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இவர் தான் அந்த கோபியோ..?