வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (14:48 IST)

தயாரிப்பாளர்களுக்கு எதிராக திடீர் போராட்டத்தில் இறங்கிய இயக்குனர்கள்

தயாரிப்பாளர்களுக்கு எதிராக திடீர் போராட்டத்தில் இறங்கிய இயக்குனர்கள்

தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினாலும், சங்கங்கள் என்று வரும்போது நிதானமாக யோசித்தே முடிவெடுக்கிறார்கள் தமிழ் திரையுலகில்.


 


அப்படியிருக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னால் நூற்றுக்கணக்கான இயக்குனர்கள் திடீரென்று போராட்டம் நடத்தி அதிர்ச்சியடைய வைத்தனர். இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விக்ரமன் தலைமையில் நடந்தது இந்த போராட்டம்.
 
எதற்காக இந்த திடீர் போராட்டம்? இயக்குனர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அளித்த மனுவில் அது உள்ளது.

அந்த மனு விவரம் 

தற்போது தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் கில்டு ஆகியவற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறை. புதிதாக தலைப்புகளை பதிவு செய்ய இந்த சங்கங்களை அணுகும்போது ஏற்கனவே அந்த தலைப்பு பதிவாகி இருக்கிறதா? இல்லையா என்று பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
 
இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த முறையால் சில முறைகேடுகளும் நடக்கின்றன. பதிவாகாத தலைப்புகளை பதிவு செய்து விட்டதாக ஒரு சிலர் சொல்கிறார்கள். இதே தலைப்புதான் வேண்டும் என்றால் வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று சிலர் பேரம் பேசுகின்றனர். இந்த குறைபாடுகளை களைய பட தலைப்புகளை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
இந்த முறை இயக்குனர்களுக்கு மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும். ஆன்லைன் முறை சிரமமாக இருக்கும் என்று கருதினால் அதற்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேரையும் நாங்களே வடிவமைத்து தருகிறோம்.