1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2017 (16:46 IST)

மீண்டும் பதுங்கியது சிங்கம்

டிசம்பர் 23 திரைக்கு வரும் என்றார்கள். பிறகு ஜனவரி 26 என்றார்கள். இல்லையில்லை பிப்ரவரி 3 -ஆம் தேதி வருகிறோம்.

 
என்றார்கள். இப்போது அன்றும் திரைக்கு வரப்போவதில்லையாம், சூர்யாவின் எஸ் 3.
 
யு/ஏ பிரச்சனை, மோடியின் பண ஒழிப்பு, ஜல்லிக்கட்டு என்று அனைத்துப் பிரச்சனைகளையும் எதிர்கொண்ட எஸ் 3 பிப்ரவரி 3 வெளியாகும் என அறிவித்தனர். தற்போது என்ன பிரச்சனையோ?
 
பிப்.3 படம் வராது, பதிலாக பிப்.9 படம் கண்டிப்பாக திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அன்னைக்காவது வந்திடுங்க...