1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (12:39 IST)

ஜோதிகாவை அடுத்து ஓடிடிக்கு வரும் த்ரிஷா படம்!

ஜோதிகாவை அடுத்து ஓடிடிக்கு வரும் த்ரிஷா படம்!
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் மூடப்பட்டிருப்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் சின்ன பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை நிலைமை பரிதாபமாக உள்ளது 
 
மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என்றாலும் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு பின்னரே திரையரங்கங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படத்தை நேரடியாக ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சூர்யா முடிவு செய்தார். அவரது இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும் வரும் மே மாதம் முதல் வாரம் இந்த படம் அமேசான் ப்ரைம் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜோதிகா படத்தை அடுத்து த்ரிஷா நடிப்பில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருக்கும் ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படமும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்க காலதாமதம் ஏற்பட்டால் பல சின்ன பட்ஜெட் மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் ஓட்டி பிளாட்பாரத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது