செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

'தீ முகம் தான்' பாடலுக்கு போட்டியாக வெளியாகும் 'சிங்கப்பெண்ணே

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் இடம்பெற்ற தீம் பாடலான 'தீ முகம் தான்' என்ற பாடல் நேற்று வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பாடல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல மணி நேரம் டிரெண்டில் இருந்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்த திடீரென ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது
 
அதாவது விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணை' என்ற பாடல் வரும் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் நாட்டிலுள்ள ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கும் பாடலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே விஜய் நடித்த 'பிகில்' பட பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது அஜித்-விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.