வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (14:58 IST)

18 ஆண்டுகளுக்கு பிறகு தேவசேனாக்கு அம்மாவான மதுபாலா

நடிகை மதுபாலா மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் அழகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா, வானமே எல்லை, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல  படங்களில் நடித்தவர்.

 
1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை மதுபாலா திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார். 2010ம் ஆண்டில் ஜெயா டிவியில் செளந்திரவல்லி என்ற தொடரில்  நடித்தார்.
 
தற்போது பாகுபலி படத்திற்குக் கதை எழுதிய ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் ஹிந்தியில் ஆரம்ப தொடர்  வெளியாக உள்ளது. இதில் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் தேவசேனாவாக நடிக்க உள்ளார். இதில் கார்த்திகா அம்மாவாக மதுபாலா நடிக்க உள்ளார். இந்தத் தொடர் வருகிற 24ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.