திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (23:54 IST)

மாஸ்டர் பட ரிலீஸிக்குப் பின் வருத்தத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீசான படம் விஜய்யின் மாஸ்டர்.

இப்படத்திற்கு நல்லவரவேற்பு கிடைத்ததுடன், சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியது.

இந்நிலையில் இப்படத்தை அடுத்து,  நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ், விஷாலின் சக்ரா போன்ற படங்கள் ரிலீஸானது.

ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு மக்கள் இப்படங்களைப் பார்க்க வரவில்லை எனத் தெரிகிறது. மாஸ்டர் படத்தைப் பார்க்க வந்த மக்களில் 20% மட்டுமே இப்படங்களைப் பார்க்க வந்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர், கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் போன்ற படங்களை தியேட்டர் உரிமையாளர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.