ஓடிடி சினிமாவை அழித்துவிடும்: பிரபல இயக்குனர் வேதனை!
ஓடிடி சினிமாவை அழித்து விடும் என பிரபல இயக்குனர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது திரையுலகினர் திரையரங்குகளில் தங்கள் படங்களை வெளியிட ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் ம்பாதித்திப்பதோடு, ஓடிடியிலும் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஓடிடி சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் என பிரபல மலையாள இயக்குனர் அடூர் பாலகிருஷ்ணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்
தாதா சாகேப் பால்கே விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அடூர் பாலகிருஷ்ணன் திரையரங்குகளில் பார்க்கப்படும் சினிமா என்பது ஒரு சமூக அனுபவம் என்றும் ஆனால் வீட்டிற்குள் முடங்கி சின்னத்திரையில் நாம் இப்போது தள்ளப்பட்டு விட்டோம் என்றும் சினிமா பிழைக்க வேண்டுமென்றால் சின்னத்திரையை நம்பி இருக்கக் கூடாது என்றும் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran