பாலா படத்தில் அதிரடி வில்லனாகும் அதர்வா ??

atharva
Sinoj| Last Updated: வியாழன், 21 ஜனவரி 2021 (22:36 IST)

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இவரது தந்தை பிரபல நடிகர் முரளி . அவரது மறைவுக்குப் பின்னர், இயக்குநர் பாலா தனது இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவரை ஹீரோவாக நடிக்கவைத்து நடிப்புக்குத் தீனி கொடுத்தார்.

அதர்வா அப்படத்திற்குப் பின்னர் முன்னணி நடிகராக உருவெடுத்தார். ஆனால் அதன் பின்னர் வெளியான படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில், இயக்குநர் பாலா அடுத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளர் எனவும் இப்படத்தில் அதர்வா வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஆனால் இத்தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :