1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (14:08 IST)

தயாரிப்பாளராகும் நடிகை விஜயலட்சுமி

இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தயாரிப்பாளராக முடிவு செய்துள்ளார்.
 

 
சென்னை 28 படத்தில் அறிமுகமான விஜயலட்சுமிக்கு அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பி, அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தார். அப்படம் முடிந்து ஒரு வருடம் தாண்டியும் இன்னும் திரைக்கு வரவில்லை.
 
இந்நிலையில் விஜயலட்சுமி உதவி இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, படங்களில் இனி நடிப்பதில்லை என விஜயலட்சுமி கூறியுள்ளார்.
 
அதேநேரம் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். காதலரை இயக்குனராக்கும் திட்டமாக இருக்குமோ?