பாலிவுட்டில் 18 ஆண்டுகள்… மறைந்த இயக்குனருக்கு நன்றி சொன்ன வித்யா பாலன்!
பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யா பாலன் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகளைக் கடந்துள்ளார். ஆனால் அவர் முதலில் சினிமா வாய்ப்புகளை தேடியது தமிழ் சினிமாவில்தான். ஆனால் அப்போது அவரை ராசியில்லாத நடிகை என தவிர்த்துவிட்டனர்.
இது பற்றி பேசியுள்ள அவர் “மாதவனுடன் ரன், மனசெல்லாம் போன்ற படங்களுக்கெல்லாம் டெஸ்ட் ஷூட்டுக்கு சென்றேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன். அப்போது என் இதயமே நொறுங்கியது போல தோன்றியது. அதற்கு பிறகு ஹிந்தியில் அறிமுகம் ஆனேன். ஹிந்தி சினிமா எனக்கு நல்ல கெரியரை வழங்கியது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்தியில் முதல் முதலாக அவர் அறிமுகமான பரினீதி படம் ரிலீஸாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் மறைந்த இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் சர்க்காருக்கு நன்றி தெரிவித்துள்ளார் வித்யா பாலான். அதில் “நானே என்னை நம்பாத போதும் என்னை நம்பி வாய்ப்பளித்ததற்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.