வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 27 நவம்பர் 2014 (09:33 IST)

வேதிகாவின் கவர்ச்சிப் பாடல்

வேதிகாவின் கடைசி தமிழ்ப் படம் பாலாவின் பரதேசி. அவரது வழக்கமான கறுப்பு மை மேக்கப்பில் பிரகாசமான வேதிகா கரிபடிந்த விளக்காக காட்சியளித்தார். கறுப்பு மையை கண்டபடி செலவளிப்பதற்கு பேசாமல் கறுப்பாக இருக்கும் ஒருவரையே பாலா நடிக்க வைக்கலாம். மேக்கப்பைப் பார்த்து பயமா இருக்கில்ல.
 
சரி, விஷயத்துக்கு வருவோம். வசந்தபாலனின் காவியத்தலைவனில் வேதிகாதான் நாயகி. கே.பி.சுந்தராம்பாளை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். அதிலும் இழுத்திப் போர்த்தி கவர்ச்சிக்கு காலணா வாய்ப்பில்லாமல்தான் நடித்துள்ளார். வளரும் நடிகைக்கு யூரியா மாதிரிதான் கவர்ச்சியும். உரம் இல்லையேல் வளம் இல்லை. 
 
தமிழில் கவர்ச்சிக்கு கடைசி இரு படங்களும் உத்தரவாதம் அளிக்காத நிலையில் மலையாளப் படத்தில் யூரியாவை கொஞ்சம் அதிகமாகவே வேதிகா தூவியிருக்கிறார். 
 
கஸின்ஸ் என்ற மலையாளப் படத்தில் குஞ்சாகா போபனுடன் வேதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக சென்னையில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர். மலையாளப் படங்களில் பாடல் காட்சிக்கு வயலும் வரப்பும்தான் செட் பிராப்பர்ட்டி. அப்புறம் கேமரா, தெர்மோகோல், தேவைப்பட்டால் சில விளக்குகள். மாறாக இந்தப் பாடலுக்கு எண்பது லட்சங்கள் செலவளித்திருக்கிறார்கள். மிகக்குறைந்தது என்றால் வேதிகாவின் காஸ்ட்யூம்தான். ரொம்பவும் சிறிசாம். 
 
படத்தை தமிழில் டப் செய்வார்களா?