1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (08:57 IST)

“தயவு செஞ்சு மாஸ்க் போடுங்க…” கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை அறிவுரை

நடிகை வேதிகா தான் முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", "சக்கரகட்டி", "பரதேசி" போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.

சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிக்காத வேதிகா, இப்போது யோகி பாபு நடிக்கும் ‘கஜானா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் தான் கொரோனா தொற்றால் முதல் முறையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் “யாரும் அறிகுறிகளை சாதாரணமாக எண்ணவேண்டாம். தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள். நான் கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு இப்போது நலமாக உள்ளேன். விரைவில் இதில் இருந்து மீண்டு வருவேன்” எனக் கூறியுள்ளார்.