புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:52 IST)

நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா? புகைப்படம் வெளியீடு!!

போடா போடி, தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகளாவார்.


 
 
தற்போது அம்மாயி, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 
இந்நிலையில், வரலட்சுமி கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு புகைப்படம் வைரலாக பரவத் தொடங்கியது. மேலும் #VaralaxmiGotKidnapped என்ற ஹாஸ் டேக்கும் பரவத் தொடங்கியது. 


 

 
இதுகுறித்து வரலட்சுமி தரப்பில் விசாரிக்கும் போது, இது வரலட்சுமி நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷன் என்று கூறப்பட்டுள்ளது. 
 
படத்தை அறிவிக்கும் முன்னதாக பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.