செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2020 (17:59 IST)

முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை... எந்த முத்தத்தை எதுகூட சேக்குறீங்க வனிதா...?

நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இப்படி எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி தன் புதுமண வாழ்வை வனிதா திருப்தியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் கொடுத்த முத்த புகைப்படமொன்றை வெளியிட்டு " மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று " என அப்பா மகள் உறவின் புனிதமான வசனத்தை காம முத்தத்திற்கு ஒப்பிட்டுள்ளார். இது பலரையும் வெறுப்படைய வைத்துள்ளது.