வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஏப்ரல் 2020 (10:28 IST)

அவங்க மட்டும் ஒஸ்தியோ..! அப்புறம் ஏன் தமிழ் படத்தில் நடிக்குற..? கோபப்படுத்தும் தமன்னாவின் செயல்!

தமிழ், தெலுங்கு , இந்தி என கடந்த 12 வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.  அயன் , பையா ,பாகுபலி, வீரம், தர்மதுரை , வேங்கை, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

மற்ற மொழி படங்களை விட நடிகை தமன்னா தமிழில் தான் அதிக படம் நடித்துள்ளார். இது இப்படி இருக்க தற்போது கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்து உதவி செய்துள்ளார். இது தமிழ் சினிமா தொழிலாளர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

உதவி எல்லோருக்கும் முடிந்தவரை செய்யவேண்டும். இல்லை என்றால் அமைதியாக இருக்கவேண்டும். அது என்ன பிரிவினை பார்த்து உதவி செய்வது. ஏன்? தமிழ் சினிமா உங்களின் மார்க்கெட்டை உயர்த்தவில்லையா?  அப்படி இருந்தால் ஏன் தமிழ் படங்களில் நடிக்கிறீர்கள் என தமிழ் தொழிலார்கள் கேள்வி கேட்டு கோப்படும் அளவிற்கு தமன்னா நடந்துகொண்டுள்ளார்.