செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (12:39 IST)

நம்மள திடீன்னு உயரத்துக்கு கொண்டு போயிடும்! தத்துவம் பேசும் தமன்னா

நல்ல வாய்ப்புகள் திடீரென்று வரும். அவ நம்மை உயரத்துக்கு கொண்டு போய்விடும் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

தனது 12 வருட  சினிமா அனுபவங்கள் பற்றி நடிகை தமன்னா பேசுகையில்,  "சினிமாவில் எதிர்பார்ப்பது நடக்காது. எதிர்பாராதது நடக்கும். திரையுலகில் நல்ல படங்கள் எங்கிருந்து வரும் என்பதை யாராலும் கணிக்க  முடியாது. திடீரென்று வரும். நம்மை உயரத்துக்கு கொண்டு போய்விடும்" என்று தத்துவம் பேசுகிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,  ‘‘நான் திரையுலகில் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் புரியாமல் இருந்தாலும் இப்போது தெளிவாகி விட்டேன். திரையுலகம் பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. எனது நிஜ வாழ்க்கைக்கும், சினிமாவுக்கும் இருக்கும் தொடர்பை உணர்கிறேன் என்றார்.