1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2025 (14:40 IST)

சுசித்ரா சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கவேண்டும்… விஷால் விஷயத்தில் ஆதரவாக களமிறங்கிய நடிகை!

சில தினங்களுக்கு முன்னர் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது முதலாக ’விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?’ என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது. அவர் சம்மந்தமாக பலவிதமான தகவல்கள் பரவின.

இது சம்மந்தமாக தன்னுடைய யுடியூப் சேனலில் பேசியுள்ள அவர் “ நான் கார்த்திக் குமாரோடு வாழ்ந்த போது ஒரு நாள் அவர் இல்லாத போது கையில் ஒயின் பாட்டிலோடு போதையில் விஷால் என் வீட்டுக் கதவைத் தட்டினார். கார்த்திக் குமார் பற்றி பேசி உள்ளே வரட்டுமா என்று கேட்டார். நான் அவர் இல்லை என்று சொல்லி உள்ளே வரக் கூடாது என சொல்லி திட்டி அனுப்பிவிட்டேன். அப்போது ஒயின் பாட்டிலைப் பிடித்திருந்த கைதான் இப்போது நடுங்குகிறது. அதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாகதான் இருக்கிறது.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சுசித்ராவின் இந்த பேச்சு பொய்யானது என நடிகை ஷர்மிளா பேசியுள்ளார். அதில் “நாம் சாதாரணமாக ஒருத்தர் வீட்டுக்குப் போகிறோம் என்றாலே அவர்களுக்கு போன் செய்து கேட்டுவிட்டுதான் போவோம். விஷால் போன்ற பிரபலம் அப்படி கேட்காமல் போயிருப்பாரா? இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது. ஒன்று சுசித்ரா பொய் சொல்லி இருக்கவேண்டும் அல்லது அவரே போன் செய்து விஷாலை வர சொல்லி இருக்கவேண்டும். சுசித்ரா தான் பேசும் எந்த விஷயத்துகாவது ஆதாரம் காட்டியுள்ளாரா?” எனக் கூறியுள்ளார்.