1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 20 மே 2015 (15:07 IST)

சனுஜாவின் டெடிகேஷன் - கன்னடத்திலும் சொந்தக் குரல்

ரேனிகுண்டா ஹீரோயின் சனுஜாவுக்கு தமிழில் வாய்ப்புகளில்லை. தாய் மொழியான மலையாளத்தில் அவ்வப்போது சில வாய்ப்புகள். அங்கு படமும் தயாரிக்கிறார்.
முதல்முறையாக கன்னடத்தில் சிவராஜ்குமாரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சனுஜாவுக்கு கிடைத்தது. சரித்திர படம். பெயர், கபிரா. நரேந்திரபாபு இயக்கம்.
 
சனுஜாவுக்கு கன்னடம் சரியாக தெரியாது. படப்பிடிப்பில் திக்கித்திணறிதான் சமாளித்தாராம். ஆனால், தனது போர்ஷனுக்கு நான்தான் டப்பிங் பேசுவேன் என்று உறுதியாக இருந்து அதனை சாதித்தும் இருக்கிறார்.
 
ம்... இந்தளவு ஆத்மார்த்தம் இருந்தால் தமிழுக்கு சரிவராது.