1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (19:36 IST)

நடிகை சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தார்.
 
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையால வலம் வருபவர் சமந்தா. இவர் தெறி, கத்தி, தங்கமகன், அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். புஷ்பா படத்தில் இவர்   ஓ சொல்றியா மாமா என்ற  பாடலுக்கு டான்ஸ் ஆடியது ரசிகர்களை கவர்ந்து, இப்பாடலும் வைரலானது.
 
சில ஆண்டுகளுக்கு முன்  நடிகர்  நாகசைதன்யாவை  காதலித்து திருமணம் செய்து கோண்ட பின்னர், இருவரும் விவாகரத்து பெற்றனர்.
 
இந்த நிலையில், மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து குணமடைந்து இப்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதன்படி, இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  விரைவில் தமிழில் படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களிலும் அவர் நடித்து வருகிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.8 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகிறது.