Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்பு-தனுஷ் பட நடிகைக்கு காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி

வியாழன், 11 மே 2017 (23:02 IST)

Widgets Magazine

சிம்புவுடன் 'குத்து', தனுஷூடன் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ரம்யா. இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே மாண்டியா தொகுதியின் எம்பியாக இருந்தவர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர் தற்போது நடிக்கும் தொழிலை முழுமையாக விட்டுவிட்டு அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார் 


இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் தற்போது நடிகை ரம்யாவுக்கு சமூக வலைத்தளங்களைக் கையாளும் குழுவின் தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளது.  ஏற்கெனவே, இந்த பொறுப்பை வகித்த ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக் தொகுதி எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா தன்னை இப்பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அவருக்கு பதிலாக நடிகை ரம்யாவுக்கு அந்த பொறுப்பைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. சமூக வலைத்தளங்கள் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியை மத்தியில் ஆட்சியில் உட்கார வைக்கும் வரை ஓயமாட்டேன்' என்று ரம்யா கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இந்த நடிகை என் மனைவியின் யங் வெர்ஷன்: பிரபல இயக்குனர்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சிகிருஷ்ணா, நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் என்பது அனைவரும் ...

news

நடிகைக்கு ஆறுதலாக இருக்கும் அரசியல் வாரிசு!!

வம்பு நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த இந்த நடிகை.

news

இந்த முறையாவது ரசிகர்களைச் சந்திப்பாரா உச்ச நட்சத்திரம்?

தனக்குப் பிடித்த நடிகனைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில், அந்த நடிகர்களே கொண்டாடும் ...

news

இணையுமா இந்த ஜோடி?

வெயில் காலத்தில் சருமப் பிரச்னையால் அடிக்கடி அவதிப்படும் இந்த நடிகைக்கு, மழைக்காலமான ...

Widgets Magazine Widgets Magazine