1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2024 (12:51 IST)

யோகா டீச்சரை திருமணம் செய்கிறார் ரம்யா பாண்டியன்.. இமயமலையில் திருமண ஏற்பாடு?

நடிகை ரம்யா பாண்டியன் யோகா டீச்சரை திருமணம் செய்ய இருப்பதாகவும், இமயமலையில் உள்ள ரிஷிகேஷில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், ரம்யா பாண்டியன் பெங்களூரில் உள்ள யோகா சென்டருக்கு பயிற்சிக்காக சென்ற போது, அங்குள்ள யோகா டீச்சரை காதலித்ததாகவும், இரு வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ரம்யா பாண்டியன் திருமணம் இமயமலையில் உள்ள ரிஷிகேஷில் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
 
 
Edited by Siva