திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (12:22 IST)

50-வது பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன் - குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ள நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சிவகாமி கதாபாத்திரத்தின் மூலம் தன்பக்கம் ஈர்த்தார்.

தொடர்ந்து பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட தான் நடிக்கும் அத்தனை படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்வவதில் சிறப்பு மிக்கவர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகின்றனர்.


அந்தவகையில் ரம்யா கிருஷ்ணனும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு வயது போட்டோ, வளைகாப்பு புகைப்படம் என இந்த லாக்டவுன் நேரத்தில் பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். இந்நிலையில் இன்று தனது 50-வது பிறந்தநாளை கணவர் , மகன் மற்றும் சொந்தங்களுடன் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவருக்கு சுஜா வருணி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fifty and fabulous n what better than a FAMJAM to bring it on!!!! #familylove #birthday #thankyougod #blessed

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on