1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:31 IST)

ஜொலிக்கும் உடையில் மிளுரும் ரகுல் ப்ரீத் சிங்… லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்து முன்னணி நடிகையாக உயர்ந்த அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.