வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (12:30 IST)

நீச்சல் உடையில் பாய்ச்சல் காட்டும் ராய் லட்சுமி

எந்த மொழியில் நடித்தாலும், இந்தியில் வெற்றி பெற வேண்டும் என்பதே பெரும்பாலான நடிகைகளின் கனவு.


 

 
ராய் லட்சுமி நடிக்க வரும்போதே அந்தக் கனவுடனே வந்தார். தமிழ், தெலுங்கில் நடித்து வந்தாலும், அவரது எண்ணம் செயல் எல்லாம் இந்தியை நோக்கியே இருந்தது.
 
முருகதாஸ் இந்தியில் இயக்கிவரும், அகிரா, ஜுலி 2 படங்களில் ராய் லட்சுமி தற்போது நடித்து வருகிறார். ஒரேநேரத்தில் இரு இந்திப் படங்கள்.
 
வாழ்நாள் லட்சியத்தை எட்டிப்பிடிக்க இதைவிட வாய்ப்பு அமையாது. அதனை ராய் லட்சுமி சரியாகப் பயன்படுத்தி வருகிறார். எப்படி?
 
அகிராவில் போலீஸ் அதிகாரியை செடியூஸ் செய்யும் கதாபாத்திரம். ஜுலி 2 -இல் கவர்ச்சியான வேடம். நீச்சல் உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டியாக வேண்டும். ராய் லட்சுமியும் மறுப்பு சொல்லாமல் பிகினி உடையில் நடித்திருக்கிறார்.
 
நடிப்புக்காக இல்லாவிட்டாலும், கவர்ச்சிக்காவது ராய் லட்சுமியை இந்தி சினிமா பயன்படுத்திக் கொள்ளும் என்கிறார்கள்.