புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (15:33 IST)

விரைவில்! நடிகை பிரியாமணி வீட்டில் "குவா குவா" சத்தம்...?

இயக்குனர் பாரதிராஜாவால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பிரியாமணி, பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு தனுஷ், பிருத்திவிராஜ், விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னனி நடிகர்ளுடன் நடித்தார். 


 
கார்த்தியுடன் நடித்த பருத்தி வீரன் படம் தமிழில் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அந்த படத்தில் மதுரை தமிழில் சொந்தக்குரலில் பேசி நடித்த பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இதனிடையே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்தார். 
 
புதுமுக ஹீரோயின்கள் வருகையினால் அவருக்கு வாய்ப்புகள் குறையத்தொடங்கியது. பிறகு  மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 
 
இதற்கிடையே, தொழிலதிபர் முஸ்தபா ராஜு என்பவரை காதலித்து 2017 ம் ஆண்டு  திருமணம்  செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறிய பிரியா மணி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் ‘ ஒளிபரப்பான நடுவராக பங்குபெற்றார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். 
 
நீண்ட நாட்களாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்த பிரியாமணி தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 
 
அப்போது பிரியாமணி அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றமளித்தாங்க. அவரை கண்ட அனைவருமே அதிர்ந்துவிட்டனர் .  காரணம் உடல் எடை கூடி குண்டாக மாறி இருந்தார் பிரியாமணி.


 
அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்றும் கூறப்படுகிறது அதனை உறுதி செய்வது போல தான் இந்த புகைப்படமும் இருக்கிறது. இருந்தாலும் இதை பற்றி பிரியாமணி தெரிவித்தால் மட்டுமே வதந்தி பேசுச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.