வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (12:32 IST)

ஆணழகன் செய்த வேலை: கொதித்தெழுந்த பிரியா ஆனந்த்!!! டிவிட்டரில் போர்...

தன்னை ராசியில்லாதவள் என டிவிட்டரில் கருத்து பதிவிட்டவருக்கு நடிகை பிரியா ஆனந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர், நடிகைகள் சிலர் சமூகவலைதளத்தில் எப்பொழுது ஆக்டிவாக இருப்பர். ஆனால் பலர் சமூக வலைதளபக்கமே வரமாட்டார்கள். ஏனென்றால் சிலர் நடிகர், நடிகைகளை விமர்சித்தும், கலாய்த்தும் கருத்து பதிவிடுவர். இதற்கு பயந்தே பலர் சமூக வலைதள பக்கமே செல்வதில்லை.
 
இந்நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் ஸ்ரீதேவி இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில்  ப்ரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. அதேபோல் எல்.கே.ஜி. படத்தில் ஜே.கே. ரித்தீஷ் ப்ரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே. ரித்தீஷும் தற்போது இறந்துவிட்டார். ப்ரியா ஆனந்துடன் சேர்ந்து நடிக்கும் சக கலைஞர்கள் இறந்துபோகிறார்கள். கெட்ட ராசியின் அடையாளமா ப்ரியா ஆனந்த்  என கேள்வி எழுப்பி ஆணழகன் என்பவர் ட்வீட் செய்தார்.
இதனைப்பார்த்து கடுப்பான பிரியா ஆனந்த் பொதுவாக உங்களை மாதிரியானவர்களுக்கு நான் பதில் அளிப்பது இல்லை. சமூகவலைதளங்களில் இப்படி மட்டமாக நடந்துகொள்வதில் உங்கள் தரம் தெரிகிறது.  நீங்கள் செய்தது போல நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன் என பதிலளித்தார். இதனைப்பார்த்த அந்த நபர் பிரியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.