ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:21 IST)

நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள்...பாகுபலி நடிகர் வாழ்த்து, படக்குழு’’ சர்ப்ரைஸ் கிஃப்ட்’’ !

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

இவருக்கு இன்று (அக்டோபர் 13 )பிறந்தநாள் எனவே  பல்வேறு பிரபலங்கள், நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரதே ஸ்யாம் என்ற படத்தின் போஸ்டரை இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு படக்குழுவினர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் பூஜா ஹெக்டேவின் பெயர் பிரேரேனா ஆகும்.

இப்பட போஸ்டரில் அவர் நடிகர் பிரபாஸுக்கு எதிரில் அமர்ந்திருக்கிறார். இப்படம் இந்தி, தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Introducing @hegdepooja as 'Prerana' from #RadheShyam. #HappyBirthdayPoojaHegde #Prabhas @director_radhaa @TSeries @UV_Creations @AAFilmsIndia
நடிகர் பிரபாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டேக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.