1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 மே 2017 (15:30 IST)

நான் அப்படி பண்ணுவேனா? உங்கள நம்பறேன்: தனுஷ் பட நாயகி வருத்தம்!!

நடிகை பார்வதி மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரை பற்றிய செய்தி ஒன்று வெளியானது. 


 
 
ரூ.35 லட்சம் சம்பளம் வாங்கி வந்த பார்வதி, தற்போது ஒரு கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டது. மேலும் மலையாள சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பார்வதி தான் என்றும் செய்தி வெளியானது.
 
இந்நிலையில், பார்வதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், செய்தி வெளியிடுவதற்கு முன்பு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். எந்த ஊடகத்துக்கும் சம்பளம் குறித்து நான் பேட்டி கொடுத்ததில்லை. ஆனால் பல ஊடகங்களில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. நான் என் சம்பளத்தை உயர்த்தவும் இல்லை.
 
மேலும், நான் எவ்வளவு சம்பளம் பெறுகிறேன் என்பது யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது எனக்கும் தயாரிப்பாளருக்குமானது. என்னைப் பற்றிய தவறான செய்திகளை நீக்கிவிடுங்கள். இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று வருத்தத்துடன் ஊடங்களுக்கு எழுதியுள்ளார்.