1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:20 IST)

இயக்குனர் என்னை அடித்தார்… ஆனால் நான் இயக்குனரை அடித்ததாகப் பரப்பிவிட்டார்கள் – பத்மபிரியா வேதனை!

தமிழில் தவமாய் தவமிருந்து. மிருகம், சத்தம் போடாதே மற்றும் பொக்கிஷம் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பத்மபிரியா. அதுமட்டுமில்லாமல் ஏராளமான மலையாளப் படங்களில் நடித்த அவர் கடந்த 8 ஆண்டுகளாக எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக தங்கமீன்கள் படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் மிருகம் படத்தில் நடிக்கும் போது சரியாக நடிக்கவில்லை இயக்குனர் சாமி இவரை அறைந்ததால் இவர் கோபப்பட்டு திரைப்படச் சங்கத்தில் புகாரளித்தார். அதையடுத்து இயக்குனர் சாமிக்கும் திரைப்படங்கள் இயக்க சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “ஒரு பெண் பிரச்சனையைப் பற்றி பேசினாலே, அவளையே பிரச்சனையாக்கி விடுகிறார்கள். மிருகம் படத்தில் இயக்குனர் என்னை அறைந்தார். ஆனால் ஊடகங்களில் நான் இயக்குனரை அடித்து விட்டதாக செய்திகள் வெளியாகின.  ஆனால் இயக்குனருக்கு எதிராகப் புகார் கொடுத்ததால், ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட படங்களில் இருந்து விலக்கப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.