வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 30 அக்டோபர் 2019 (16:03 IST)

திறப்பு விழாவிற்கு இம்புட்டு லேட்டா வருவீர்களா...நடிகையின் மூக்கை உடைத்த கூட்டம் - வீடியோ

மலையாளத்தில்  வெளிவந்த  "ஒரு அடார் லவ்" படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை நூரின் ஷெரீப். இந்த படத்தில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது மலையாள படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். 
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை திறந்து வைக்க சென்றுள்ளார். மாலை 4 மணிக்கு செல்லவேண்டிய அவர் 6 மணிக்கு சென்றதால் அவரை காண காத்திருந்த ரசிகர்கள் முந்தியடித்து அவரது காரை சூழ்ந்துக்கொண்டனர்.  பின்னர் அந்த கூட்டத்திலிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்த நடிக்கையின் மூக்கில் யாரோ இடித்துவிட்டனர். இதனால் ரத்தம் கொட்ட அழுதுகொண்டே கடையை திறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். 
 
இது குறித்து நடிகையின் அம்மா கூறியதாவது, "கடை திறப்பு விழாவுக்காக நாங்கள் மாலை 4 மணிக்கே கிளம்பினோம். ஆனால், அந்த  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, இன்னும் கூட்டம் கூடட்டும், அதன் பிறகு வாங்க என கூறி எங்ககளை தாமதிக்க வைத்துவிட்டனர். இதற்கு முற்றிலும்  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம். மேலும், அங்கு வெறும் நான்கு பவுன்சர்களே இருந்ததால் அவர்களால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. இதனால் நூரினை பாதுக்காக முடியாமல் போய்விட்டது என கூறினார்.