ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:41 IST)

டைம் மெஷின் கிடைத்தால் என்ன செய்வேன்… கண்ணீர் விட்டு பேசிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பிறகு தனது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள நெற்றிக்கண் படத்தின் ஓடிடி ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அத்தி பூத்தாற்போல கலந்துகொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது டைம் மெஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில் ‘என் தந்தை விமானப் படைப்பிரிவில் வேலை செய்தார். அவர்தான் என்னுடைய ஹீரோ. ஆனால் இப்போது அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார். டைம் மெஷின் கிடைத்தால் அவரின் பழைய உடல்நிலைக்கு அவரை மீண்டும் அழைத்து வந்துவிடுவேன்’ எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.