Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தை மேடையில் அவமான படுத்திய நடிகை!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (10:47 IST)
தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அதிகம் விரும்பும் நடிகர் அஜித். காரணம் அஜித்தின் குணத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் திரைத்துறையில் உள்ளனர். 

 
 
1993 ஆம் ஆண்டு அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அஜித் அறிமுகமானார். அப்போது அஜித் பிரபலமாகாத காலகட்டம் அது.
 
1999 ஆம் ஆண்டு மீனாவுடன் நடித்த ஆனந்த பூங்காற்றே திரைப்படம் வெளியானது. அந்த வருடம் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது. 
 
விருதை நடிகை மீனா மேடையில் வழங்கினார். இருவரையும் நடனம் ஆட நிகழச்சி தொகுப்பாளர் கேட்டார். அப்போது எல்லோரும் மீனாவின் அம்மா மேடைக்கு வந்து, என் மகள் ரஜினி, கமலுடன் நடித்தவள். உன்னுடன் நடனம் ஆடினால் பொருத்தமாக இருக்காது என்று சொல்லிவிட்டு மீனாவை அழைத்து சென்றுவிட்டார்.
 
ஆனால், இந்த நிகழ்வை மனதில் வைத்துக்கொள்ளாமல், பெரிய ஸ்டார் ஆன பிறகு சிட்டிஸன், வில்லன் படங்களில் மீனாவுடன் சேர்ந்து நடித்தார். 
 
இந்த நிகழ்வுக்கு பிறகு வேறு எந்த நிகழச்சியிலும் அவர் கலந்து கொண்டது கிடையாது. 


இதில் மேலும் படிக்கவும் :