புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 29 மே 2020 (12:26 IST)

கவர்ச்சி நடிகையின் மகனுக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு

vikki
தமிழ் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. இவருக்கு விக்கி என்ற மகன், பாபிலோனா என்ற மகள் உள்ளனர். பாபிலோனாவும் கவர்ச்சி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகை மாயாவின் மகன் விக்கி நேற்றிரவு வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் போதையில் இருந்தபோது திடீரென மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் விக்கி படுகாயம் அடைந்ததை அடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த வடபழனி காவல்துறையினர் விக்கியின் உறவினர்களிடம் விசாரணை செய்தபோது ’விக்கிக்கு போதை பழக்கம் இருந்ததாகவும் இதனால் அவர் அடிக்கடி போதையில் பலரிடம் தகராறு செய்ததாகவும் அவ்வாறு தகராறு செய்ததால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான், ஆட்களை அழைத்து வந்து விக்கியை தாக்கியிருக்கலாம் என்றும் கூறினர். இந்த சம்பவம் குறித்து விக்கி தரப்பிலிருந்து காவல்துறையில் புகார் செய்யவில்லை என்றும் இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விக்கி மீது போலீசாரை தாக்கியது உள்பட ஒருசில வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது