திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:48 IST)

தங்கக் காசு கொடுத்த விஜய் – நடிகை கஸ்தூரி நக்கல்

நடிகர் விஜய் ஊடகவியலாளர்களை நேற்றிரவு திடீரென அழைத்து அனைவருக்கும் தங்கக்காசுகளைப் பரிசாக அளித்த விவகாரம்தான் இன்றைய கோலிவுட் வட்டாரத்தின் ஹாட் டாபிக்

நடிகர் விஜய் தனது படங்களின் ரிலிஸின் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து நேர்காணல் அளிப்பது, விருந்து வைப்பது போன்றவை வழக்கமானது. ஆனால் சமீபகாலமாக இந்த நிகழ்ச்சிகள் விஜய் தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படுவதில்லை.

ஆனால் திடீரென் நேற்று இரவு ஊடகவியலாளர்கள் ஆன்லைன் விமர்சகர்கள் ஆகியோரை அழைத்து விருந்து வைத்து தங்கக்காசுகளை அன்பளிப்பாக அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதனால் ஒருதரப்பு விஜய் புகழ் பாட ஆரம்பிக்க மற்றொரு தரப்போ சர்கார் படத்திற்கு நேர்மறையான விமர்சனம் அளித்தவர்களை மட்டுமே அழைத்து  இந்த அன்பளிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கலுக்கு வரும் விஸ்வாசம் படத்தைத் தாக்கி விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே இந்த அன்பளிப்பு விழா எனக் குறை கூற ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் விஜய் அன்பளிப்பு அளித்த தங்கக்காசை ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் அந்த அன்பளிப்பு ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வாங்கப்பட்டது என்ற விவரம் இருக்க, ஒரு புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் நடிகை கஸ்தூரி. நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடித்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். ’ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரத்தில் நடித்துவிட்டு இப்படி ஜாய் ஆலுக்காஸில் நகை வாங்க;லாமா?’ எனக் கஸ்தூரி கேள்வியெழுப்பியுள்ளார்.