புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (13:45 IST)

சிம்புவின் ‘ஏஏஏ’ படத்தில் ஆபாச போலீஸாக கஸ்தூரி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘ஏஏஏ’ படத்தில், ஆபாச போலீஸாக நடித்திருக்கிறாராம் கஸ்தூரி.


 

ஜி.வி.பிரகாஷை வைத்து ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ என்ற பிட்டு படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்ததாக, சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை எடுத்துள்ளார். ஒருவர் இருந்தாலே ‘ஏ’டாகூடத்துக்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் இருவரும் இணைந்ததால், படத்தின் தலைப்பிலேயே மூன்று ‘ஏ’வை வைத்தனர். ஆனாலும், ‘இந்தப் படத்தில் ‘அந்த’ மாதிரியான சமாச்சாரங்கள் எதுவும் இல்லை. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும்’ என்று மைக்செட் கட்டாத குறையாக சொல்லி வந்தனர்.

ஆனால், நேற்று படம் பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘ஆபாசமாக இருக்கிறது’ என்று சொல்லி ‘யு’ சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். அவர்களுடன் போராடி எப்படியோ ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்றுவிட்டார் தயாரிப்பாளர். சென்சார் அதிகாரிகள் மறுத்ததற்கு முக்கிய காரணம், போலீஸாக நடித்திருக்கும் கஸ்தூரி, நடிப்புக்குப் பதில் கவர்ச்சியைத் தாராளமாக வழங்கியிருப்பதுதானாம்.