வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (16:45 IST)

தலைவி படத்துக்காக அதை நான் செய்தேன் – ரீல் விட்ட கங்கனா!

தலைவி படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தைக் கொண்டு வருவதற்காக 20 கிலோ வரை எடையை அதிகரித்ததாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கங்கனா ரனாவத். மேலும் ‘அனைவருக்கும் காலை வணக்கம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஏ எல் விஜய்யுடன் காட்சி பற்றிய ஆலோசனை. இந்த உலகத்தில் எவ்வளவோ அருமையான இடங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த இடம் படப்பிடிப்புத் தளம்தான்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த கங்கனா தலைவி படத்தில் ஜெயலலிதா போல தோற்றமளிக்க தான் 20 கிலோ வரை எடையை ஏற்றியதாக கூறினார். ஆனால் அவர் அப்படி ஒன்றும் எடையை ஏற்றவில்லை. சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் எல்லாவற்றிலுமே அவர் எப்போதும் போல ஒல்லியாகவே உள்ளார். மேக் அப் மூலமாகவே அவரை குண்டாக காட்டியதாக ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.