வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (09:59 IST)

பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் மரணம்!

பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் கணவர் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியுள்ளார்.

பழம்பெரும் நடிகையான ஜெயசித்ரா எம் ஜி ஆர், சிவாஜி மற்றும் முத்துராமன் ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பின்னர் குணச்சித்திர நாயகியாகவும் தொலைக்காட்சி தொடர்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இப்போது அவரது கணவர் உடல்நலக் குறைவால் பலியாகியுள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு அம்ரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் இப்போது தமிழ் சினிமாவில் வளரும் இசையமைப்பாளராக இயங்கி வருகிறார்.