வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (11:58 IST)

நடிகையைத் திருமணம் செய்துகொண்ட வயதான இயக்குநர்

வயதான இயக்குநர், நடிகையைத் திருமணம் செய்துகொண்டதால் பரபரப்பாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம்.

 
‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ போன்ற ‘ஏ’டாகூடமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’. இவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், பொன். ஸ்வாதி  என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர், இளையராஜா.

 
இந்த நிலையில், இன்று காலை ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’யில் நடித்த ஷெர்லி தாஸும், வேலு பிரபாகரனும்  மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். வள்ளுவர் கோட்டம் பின்புறமுள்ள ‘லீ மேஜிக் லேண்டர்ன்’ பிரிவியூ  தியேட்டரில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.