புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (08:24 IST)

கிழிந்த கந்தத்துணியில் போஸ் கொடுத்த விஜய்சேதுபதி பட நடிகை! படுமோசமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை நந்திதா அணிந்து போஸ் கொடுத்திருந்த உடையை பார்த்த நெட்டிசன்கள்,  இதுக்கு மேல உங்களுக்கு கிழிஞ்ச டிரௌசர் கிடைக்கலயா என்று படுமோசமாக கலாய்த்து கிண்டலடித்துள்ளனர்.


 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். 
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன்  நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
தற்போது புதுமுக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து வித்யாசமாக நடிக்கவிருக்கிறாராம்.  இப்படத்தில் விஜய் வசந்த், எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.  


 
இந்நிலையில் தற்போது சொல்லவருவது என்னவென்றால், நடிகை ஸ்வேதா சமீபத்தில் கிழிந்த டிரௌசர் அணிந்துகொண்டு போட்டோவுக்கு  போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலர் படுமோசமாக கிண்டலடித்து வருகின்றனர்.